ஒரு வார்த்தை பேச ரூ.75 லட்சம் சம்பளம் வாங்கிய நடிகர் யார் தெரியுமா?
முன்னணி நடிகர்கள் என்றாலே திரைத்துறையில் ஒரு படத்திற்கு கோடிகளில் சம்பளம் வாங்குவார்கள். அதே போல் ஒரு நடிகர் ஒரு வார்த்தைக்கு ரூ.75 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார்.
ஸ்பீட், மேட்ரிக்ஸ், ஜான் விக் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ஹாலிவுட்திரையுலகில் பிரபலமானவர் நடிகர் கீயானு ரீவ்ஸ் (Keanu Reeves).
ஒரு வார்த்தைக்கு ரூ.75 லட்சம்
லெபனானில் ஏழ்மை குடும்பத்தில் பிறந்த கீயானு ரீவ்ஸ்க்கு, 'டிஸ்லெக்ஸியா’ என்ற கற்றல் குறைபாடு இருந்தததால், அவர் தன்னுடைய பள்ளி படிப்பை கூட முடிக்கவில்லை.
1985 ஆம் ஆண்டு வெளியான `யங்பிளட்’ என்ற படத்தில் அறிமுகமான கீனு ரீவ்ஸ்க்கு, 'ஸ்பீட்’, 'மேட்ரிக்ஸ்' போன்ற படங்கள் தனி அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது.
மேட்ரிக்ஸ் படத்தில் அவருக்கு கிடைத்த 114 மில்லியன் டொலர் ஊதியத்தில், 80 மில்லியன் டொலரை அந்தப் படத்தில் பணியாற்றிய மேக்கப் ஊழியர்களுக்கும், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் ஊழியர்களுக்கும் வழங்கினார் கீனு ரீவ்ஸ்.
மேட்ரிக்ஸ் திரைப்படத்தின் 2 பாகங்களிலும் நியோ என்ற கதாப்பாத்திரத்தில் கியானு ரீவ்ஸ் நடித்திருப்பார். இந்த படத்திற்காக ரூ.450 கோடி சம்பளமாக வாங்கியிருப்பார்.
இரு பாகங்களிலும் சேர்த்து மொத்தமாக 638 வார்த்தைகள் மட்டுமே பேசியிருக்கும் இவர், இதில் ஒரு வார்த்தைக்காக சுமார் ரூ.75 லட்சம் வரை சம்பளமாக பெற்றிருக்கிறார்.
உலகில் அதிக நன்கொடை வழங்கும் நடிகர்களில் ஒருவராக இருந்தாலும், கீயானு ரீவ்ஸ் ஆடம்பர கார், பங்களா என இல்லாமல் எளிமையாக வாழ்ந்து வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |