திடீரென பிரித்தானிய ஹொட்டலுக்குள் நுழைந்த பிரபல கனேடிய நடிகர்..இன்ப அதிர்ச்சியில் திளைத்த ஊழியர்கள்
பிரபல ஹாலிவுட் நடிகர் கீனு ரீவ்ஸ் பிரித்தானியாவில் உள்ள ஹொட்டல் ஒன்றுக்கு திடீரென சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
58 வயது கனேடிய நடிகர்
ஹாலிவுட் திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் கீனு ரீவ்ஸ் (58). லெபனானில் பிறந்த இவர் கனேடிய குடிமகன் ஆவார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் இருக்கும் கீனு ரீவ்ஸ், பொதுமக்களுடன் எப்போதும் சாதாரணமாக பயணிக்கும் சுபாவம் கொண்டவர்.
ரயிலில் சாதாரணமாக பயணிப்பது, பொதுவெளியில் ஆடம்பரம் இல்லாமல் செல்வது போன்ற நடவடிக்கைகளால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
திடீர் வருகை
இந்த நிலையில், பிரித்தானியாவின் Hertfordshire நகரில் உள்ள பப் ஒன்றுக்கு திடீரென சென்ற கீனு ரீவ்ஸ், அங்கிருந்த ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
அவர்களுடன் அரட்டை அடித்த கீனு ரீவ்ஸ், இரண்டு சமையல் கலைஞர்களிடம் கைகளை குலுக்கி மதிய உணவுக்கு நன்றி கூறினார். பின்னர் ரசிகர்களுடன் இணைந்து புகைப்படங்களை அவர் எடுத்துக் கொண்டார்.
மேலும் பிரித்தானிய தம்பதியினரை அவர்களின் திருமணத்தின்போது சந்தித்து ஆச்சரியத்தை கொடுத்தார்.
நெகிழ்ச்சி தெரிவித்த நபர்கள்
உரிமையாளர் டேனி ரிக்ஸ் கூறுகையில், 'இது வினோதமாக இருந்தது. என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை என்பதால் அவர் உள்ளே நுழைந்தபோது நான் இரண்டு முறை எடுக்க வேண்டியிருந்தது. அந்த நபர் கீனு ரீவ்ஸைப் போல் இருக்கிறான் என்று நினைத்தேன். அவர் ஒரு அழகான, அடக்கமான மனிதர் மற்றும் அனைவர்க்கும் மிகவும் நல்லவர். அவரைப் பற்றி நீங்கள் நினைப்பதெல்லாம் உண்மைதான்' என தெரிவித்துள்ளார்.
அதேபோல் திருமண தம்பதி கீனு ரீவ்ஸ் குறித்து கூறுகையில், 'அவர் மிகவும் அன்பாகவும், நட்பாகவும் இருந்தார். எங்கள் திருமணத்திற்கு எங்களை வாழ்த்தினார். அவர் சில புகைப்படங்களை போதுமான அளவுக்கு எடுத்துக் கொண்டார். எங்கள் திருமண புகைப்படக் கலைஞரும் சில புகைப்படங்களை எடுத்தார். பின்னர் எங்கள் விருந்தினர்கள் உரையாடவும், புகைப்படங்களை எடுத்துக் கொள்ளவும் நேரம் ஒதுக்கினார்' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
@PA

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.