நடிகை குஷ்புவுக்கு கொரோனா! 2-வது அலையில் தப்பித்து 3-வது அலையில் சிக்கிவிட்டதாக பதிவு
பிரபல திரைப்பட நடிகையான குஷ்புவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை, அவரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் மூன்றாவது அலை தற்போது வேகமெடுத்துள்ளது. குறிப்பாக ஒமைக்ரான் வைரஸ் பரவலுக்கு பின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிரபல திரைப்பட நடிகையான குஷ்பு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், கொரோனாவின் இரண்டு அலைகளில் தப்பித்தேன்.
தற்போது மூன்றாவது அலை என்னை பிடித்துவிட்டது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், என்னை தனிமைப்படுத்திகொண்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Ok. finally #Covid catches up with me after dodging last 2 waves. I have just tested positive. Till last eve i was negative. Have a running nose,did a test n Voila! I have isolated myself. Hate being alone. So keep me entertained for the next 5 days. N get tested if any signs ?
— KhushbuSundar (@khushsundar) January 10, 2022