ஹாலிவுட் ஜாம்பவான் ராபர்ட் ரெட்போர்ட் காலமானார்: சோகத்தில் ரசிகர்கள்
ஹாலிவுட்டின் பிரபல நடிகரும், இயக்குநருமான ராபர்ட் ரெட்போர்ட் தனது 89வது வயதில் காலமானார்.
ராபர்ட் ரெட்போர்ட்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 1936ஆம் ஆண்டில் பிறந்தவர் சார்லஸ் ராபர்ட் ரெட்போர்ட் ஜூனியர்.
ராபர்ட் ரெட்போர்ட் (Robert Redfort) என தனது பெயரை சுருக்கிக்கொண்ட இவர், ஹாலிவுட் திரையுலகில் தனது 24வது வயதில் நுழைந்தார்.
1960ஆம் ஆண்டில் வெளியான Tall Story திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ராபர்ட், 1962யில் வெளியான War Hunt திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார்.
அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த ராபர்ட் ரெட்போர்ட், 1980யில் Ordinary People என்ற படத்தை முதல் முதலாக இயக்கினார்.
தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள ராபர்ட் ரெட்போர்ட், தயாரிப்பாளராகவும் வலம் வந்தார்.
தூக்கத்தில் காலமான ஜாம்பவான்
இந்த நிலையில், ராபர்ட் ரெட்போர்ட் Utahயில் உள்ள தனது வீட்டில் தூக்கத்தில் காலமானதாக தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அவருக்கு வயது 89.
அவரது மரணம் குறித்த அறிவிப்பை, விளம்பர நிறுவனமான ரோஜர்ஸ் அன்ட் கோவன் PMKயின் தலைமை நிர்வாகி சிண்டி பெர்கர் வெளியிட்டார்.
பல தசாப்தங்களாக ஹாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்த ராபர்ட் ரெட்போர்ட்டின் மரணம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |