பிரபல தமிழ் நடிகர் தற்கொலையால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! போதைக்கு இரையாகிவிட்டான் என கதறும் நண்பர்
நடிகர் லோகேஷ் தற்கொலை.
90களில் தமிழில் ஒளிபரப்பான முக்கியமான தொடர்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் லோகேஷ்
90’ஸ் கிட்ஸ்கள் இடையே பிரபலமாக இருந்த நடிகர் லோகேஷ் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1990கள் காலகட்டங்களில் மறக்க முடியாத திகிலூட்டும் தொடர்கள் என்றால் அது மர்மதேசம், விடாது கருப்பு எனலாம் . அதேபோல ஜீ பூம்பா உள்ளிட்ட தொடர்களும் குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது.
அந்த வகையில் மர்ம தேசம், ஜீபூம்பா உள்ளிட்ட தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் லோகேஷ் ராஜேந்திரன். இவர் விஜயகாந்த் நடித்த கண்ணுபட போகுதய்யா படத்தில் நடித்துள்ளார். இயக்குனராக வேண்டும் என்ற பெரும் கனவை கொண்ட இவர் ஆறு அத்தியாயம் என்ற ஆந்தாலஜியில் சூப் பாய் சுப்ரமணி என்ற ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார்.
தற்போது இயக்குனராகும் முயற்சியில் இவர் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் லோகேஷ் ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் மரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக ஹரேஷ் நாராயணன் என்பவர் தனது பேஸ்புக்கில், இன்னும் கொஞ்சம் போராடியிருக்கலாம்… போர் தெரிந்தவன்தான்.. ஆனால் போதைக்கு இரையாகிவிட்டான். #RIP Lokesh Rajendran “ என்று பதிவிட்டுள்ளார்.
லோகேஷ் மரணம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ள நிலையில் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.