மறைந்த நடிகர் மாரிமுத்துவின் தற்போதைய சொத்து மதிப்பு
மறைந்த குணசேகரன் என்ற மாரிமுத்துவின் சொத்து மதிப்பு குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் மாரிமுத்து
மணிரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே.சூர்யா ஆகியோருடன் இவர் உதவி இயக்குநராக நடிகர் மாரிமுத்து இருந்து வந்தார். ரஜினியின் ஜெயிலர், கமல்ஹாசனின் இந்தியன் 2, சூர்யாவின் கங்குவா என பிஸியாக நடித்து வந்துள்ளார்.
சினிமாவில் இருந்து சமீபத்தில் சின்னத்திரைக்கு நடிக்க வந்தார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் மூலம் ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.
இந்த தொடரில் நடிகர் மாரிமுத்து, ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் வில்லனாக நடித்தார்.
மதுரை தமிழில் இவர் பேசும் வசனங்கள் ரசிகர்களை கவரச்செய்தன எனலாம். இந்த நாடகத்தை அனைவரும் பார்க்க தொடங்கியதற்கு முக்கிய காரணமாக இருப்பது இவர் ஒருவர் மட்டுமே என்றும் கூறலாம்.
இந்நிலையில் அவர் மாரடைப்பால் இறந்து விட்டார் என்று திரையுலகமே சோகத்தில் இருந்தது. ஆகவே தற்போது நடிகர் மாரிமுத்துவின் சொத்து மதிப்பு பற்றி ஒரு தகவலும் வெளியாகியுள்ளது.
நடிகர் மாரிமுத்துவின் சொத்து மதிப்பு
இவர் பல வருடங்களுக்கு மேலாக சினிமாவில் இருந்தாலும், இப்போது தான் பிரபலமாக ஆரம்பித்தார். அப்படி இதுவரை அவர் எதிர்நீச்சல் சீரியலில் முதலில் ரூ. 20 ஆயிரம் சம்பளம் வாங்கி வந்தவர் இப்போது ரூ. 40 முதல் ரூ. 50 ஆயிரம் வரை 1 நாளைக்கு சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.
மேலும் தனது கனவு இல்லத்தையும் சில கோடி செலவு செய்து வாங்கியுள்ளார். தனக்கென கார் ஒன்றையும் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |