தவெகவில் இணைந்த நடிகர் மன்சூர் அலிகான்

Mansoor Ali Khan Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Jun 20, 2026 09:09 AM GMT
Report

நடிகர் மன்சூர் அலிகான் இன்று தவெகவில் இணைந்துள்ளனர்.

தவெகவில் மாற்று கட்சியினர் இணைப்பு விழா

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் எதிர்பாராத வெற்றியை பெற்று, விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், மாற்று கட்சியை சேர்ந்த பலரும் அந்த கட்சியில் இணைந்து வருகின்றனர்.

அதிமுகவை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியில் இணைந்ததை தொடர்ந்து, அதிமுக முன்னாள் எம்.பி, திமுக முன்னாள் எம்.எல்.ஏ என பலரும் இணைந்தனர். 

தவெகவில் இணைந்த நடிகர் மன்சூர் அலிகான் | Actor Mansoor Ali Khan Joins In Tvk

கடந்த வாரம் பாஜகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி, நடிகர் டி எஸ் ஆர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கட்சியில் இணைந்தனர். இரு நாட்களுக்கு முன்னர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் தவெகவில் இணைந்தார்.

ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையும் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் மாற்று கட்சியினர் இணைப்பு விழா நடைபெற்று வருகிறது. 

தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர்

தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர்

தவெகவில் இணைந்த நடிகர் மன்சூர் அலிகான்

இன்று, நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், அதிமுக முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசன் ஆகியோர் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடந்த மாற்று கட்சியினர் இணைப்பு விழாவில் கட்சியில் இணைந்துள்ளனர். 

தவெகவில் இணைந்த நடிகர் மன்சூர் அலிகான் | Actor Mansoor Ali Khan Joins In Tvk

தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கம்பம் எம்.எல்.ஏ. ஜெகன்நாத் மிஸ்ரா, தன்னுடைய நமது மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துள்ளார்.  

தவெகவில் இணைந்த நடிகர் மன்சூர் அலிகான் | Actor Mansoor Ali Khan Joins In Tvk

தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் அவர்களை பொன்னாடை போர்த்தி வரவேற்றார். 

தவெகவில் இணைந்த நடிகர் மன்சூர் அலிகான் | Actor Mansoor Ali Khan Joins In Tvk

நடிகர் மன்சூர் அலிகான், அரசியலின் தொடக்க காலத்தில் பாமக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தவர் பின்னர், 1999 நாடாளுமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி சார்பில் பெரியகுளம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் டிடிவி தினகரனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

2009 நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் சுயேட்சையாகவும், 2019 நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் தொகுதியிலும், 2021 சட்டமன்ற தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சையாகவும் போட்டியிடும் தோல்வியடைந்தார். 

நாம் தமிழரில் இருந்து விலகிய அவர் 2021 ஆம் ஆண்டில் தமிழ் தேசிய புலிகள்என்ற தனிக்கட்சியை தொடங்கி பின்னர் கட்சியின் பெயரை இந்திய ஜனநாயகப் புலிகள் என்று மாற்றினார்.

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக தலைவராக இருந்த மன்சூர் அலிகானை, கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசன் கட்சியில் இருந்து நீக்கினார்.

சின்ன கவுண்டர், எஜமான் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்25 ஆண்டுகளாக அதிமுகவில் இருந்துள்ளார். அதிமுக கட்சியின் கலை பிரிவு செயலாளர் பதவியில் இருந்த சில நாட்களுக்கு முன்னர் கட்சியில் இருந்து விலகி இன்று தவெகவில் இணைந்துள்ளார்.

கோமதி சீனிவாசன்

1981 சட்டசபை தேர்தலில் வலங்கைமான் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கோமதி சீனிவாசன், எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் அமைச்சராக இருந்துள்ளார்.

1996 ஆம் ஆண்டு அதிமுக. வில் இருந்து விலகி தி.மு.க.வில் சேர்ந்த இவர், 1996 சட்டசபை தேர்தலில் வலங்கைமான் தொகுதியில் திமுக. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2001 சட்டமன்ற தேர்தலில் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அவர் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். 

தவெகவில் இணைந்த நடிகர் மன்சூர் அலிகான் | Actor Mansoor Ali Khan Joins In Tvk

வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்த வழக்கில், 2012 ஆம் ஆண்டில் இவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டில் மேல்முறையீடு வழக்கில் போதிய சாட்சிகள் இல்லாததால் நீதிமன்றம் அவரை விடுவித்தது.

2013 ஆம் ஆண்டில் மீண்டும் அதிமுகவில் இணைந்த இவர், 2024 ஆம் ஆண்டில் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். தற்போது பாஜகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளார்.

இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "அதிமுகவும் திமுகவும் ஒன்று சேர்ந்ததால்தான் அதிமுகவினர் தவெகவில் இணைகின்றனர். வந்தால் பதவி தருவோம் என கூறி வியாபாரம் செய்யும் கட்சி தவெக இல்லை புரட்சி தலைவி அம்மாவிற்கு பிறகு அதிமுக கட்சியின் தலைமை சரியில்லை. 

தவெகவில் இணைந்த நடிகர் மன்சூர் அலிகான் | Actor Mansoor Ali Khan Joins In Tvk

அதிமுக வழிமாறி செல்லும்போது முதல் ஆளாக குரல் கொடுத்தவர் நமது தவெக அமைச்சர் செங்கோட்டையன். 50 ஆண்டுகள் பழமைவாதியான அவரை கட்சியிலிருந்து நீக்கியது அதிமுக தலைமையின் தவறு" என தெரிவித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US