கொரோனா தொற்றுக்கு தமிழ் திரையுலகில் அடுத்த பலி! குறைந்த வயதில் பிரபல நடிகர் மரணம்
கொரோனா பாதிப்பு காரணமாக நடிகர் மாறன் உயிரிழந்துள்ளார்.
தமிழில் டிஸ்யூம், கில்லி, வேட்டைக்காரன், ஏழுமலை, சார்பட்டா பரம்பரை, தலைநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் மாறன் (48)
இவர் மேடை நாடக கலைஞர் மற்றும் சண்டை பயிற்சி கலைஞர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஆவார்.
இந்த நிலையில் மாறனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதை தொடர்ந்து மாறன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி மாறன் உயிரிழந்துள்ளார்.
சமீபத்தில் தான் கொரோனா தொற்றால் தமிழ் நடிகர்கள் பாண்டு, கல்தூண் திலக் டைரக்டர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா ஆகியோர் உயிரிழந்த நிலையில் மாறனின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.