'தீவிர சிவ பக்தன்' மறைந்த நடிகர் மயில்சாமியை பற்றி கூறிய கிங் காங்
காமெடி நடிகர் கிங் காங் மறைந்த நடிகர் மயிலசாமியின் சிவ பக்தியைப் பற்றி கூறிய வீடியோவை இங்கே காணலாம்.
என்னுடைய இனிய நண்பர், மிமிக்கிரி மன்னன் மயில்சாமி.அவர் மிக்வும் கடவுள் பக்தி கொண்டவர். ஆவர் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரின் தீவிர பக்தர். சிவ பக்தியின் வெறியன் என்றுகூட சொல்லலாம்.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் மயில்சாமி கண்டிப்பாக திருவண்ணாமலைக்கு செல்வார். அந்த நாளில் வேறு எந்த வேலைக்கும் ஏற்றுக்கொள்ளாமல் அருணாச்சலேஸ்வரர் சாமியை தரிசிக்க தவறாமல் சென்றுவிடுவார்.
ஓவ்வொரு முறையும் மிகப்பெரிய பூ மாலையை சென்னையிலிருந்து ஆர்டர் செய்து காரில் எடுத்துச்சென்று சிவனுக்கு செலுத்துவார்.
என்னையும் அழைத்துச் செல்வார். அவருடன் பல முறை திருவண்ணாமலை கிரிவலத்திற்கு சென்றுள்ளேன். எங்களுடன் நண்பர்களையும் அவர் தனது காரில் அழைத்துச் செல்வார். மயில்சாமியுடன் அந்த அனுபவத்தை மறக்கவே முடியாது என்று கிங் காங் கூறினார்.