மொழி தெரியாமல் விமானத்தில் கஷ்டப்பட்ட நடிகர் மயில்சாமி! தமிழ் தெரிந்த பெண்கள் தேவை என பேட்டி
விமானத்தில் பயணிக்கும் போது ஆங்கிலம் தெரியாமல் சிரமப்பட்டதாகவும், விமானங்களில் தமிழ் பேசும் பெண்களை வேலைக்கு அமர்த்த வேண்டும் எனவும் நடிகர் மயில்சாமி கோரிக்கை வைத்துள்ளார்.
நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்வில் உதயநிதி ஸ்டாலினுடன் நடிகர் மயில்சாமி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், கோவையிலிருந்து சென்னை விமான பயணம் மேற்கொண்ட போது ஒரு அனுபவம் கிடைத்தது.
அப்போது விமானத்தில் இந்தி மற்றும் ஆங்கிலம் தெரியாமல் நான் கஷ்டப்பட்டேன். எனவே, தமிழகத்தில் சுற்றும் விமானங்களில் தமிழ் தெரிந்த பெண்களை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று உங்கள் வாயிலாக தந்தைக்கு (மு.க.ஸ்டாலின்) கோரிக்கை வைக்கிறேன்.
இந்தி தேசிய மொழியாக இருந்தால் கற்றுக் கொள்வேன். அது இன்னொரு மாநிலத்தின் மொழி. அதை நான் ஏன் கற்க வேண்டும் எனவும் மயில்சாமி கேள்வி எழுப்பினார்.