44 வயது நடிகை மீனாவிடம் திருமண ஆசையை கூறிய இளைஞர்! அதற்கு மீனா சொல்ல பதில பாருங்க
பிரபல திரைப்பட நடிகையான மீனா தன்னிடம் திருமண ஆசையைப் பற்றி கூறிய நபரிடம் தெளிவாக பதில் அளித்தது தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
தமிழ் திரையுலகில் சின்னஞ் சிறு குழந்தை முதல் நடித்து, பிரபலமான நடிகையாக வலம் வந்த நடிகை மீனா, அஜித், விஜய், விஜயகாந்த், கமல் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
தற்போது 44 வயதாகும் மீனா, படத்தின் முக்கியமான கேரக்டர்கள் உள்ள படங்களில் மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், மீனா சமீபத்தில், சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வந்துள்ளார்.
அப்போது, இளைஞர் ஒருவர், அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள முடியுமா? என்று கேட்க, அதற்கு மீனா, கொஞ்சம் லேட் ஆகிவிட்டதே என்று குறிப்பிட்டார்.
மீனாவின் இந்த பதில் தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.