வீட்டில் சுருண்டு விழுந்த தமிழ் படங்கள் பலவற்றில் நடித்துள்ள பிரபல நடிகர் மரணம்
பிரபல திரைப்பட நடிகர் மேலா ரகு தனது 60வது வயதில் காலமானார்.
மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்கள் பலவற்றில் நடித்துள்ளவர் ரகு. இவர் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து அபூர்வ சகோதரர்கள் என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.
மேலும் பல முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார். கடைசியாக மோகன்லாலுடன் இணைந்து திரிஷ்யம் 2 திரைப்படத்தில் ரகு நடித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 18ஆம் திகதி வீட்டில் சுருண்டு விழுந்த ரகு பின்னர் கேரளாவின் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவர் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். அவரின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.