விபத்தில் சிக்கிய சீரியல் பிரபலம்! ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வானத்தை போல சீரியலில் நடித்து வரும் மனோஜ் குமார் கார் விபத்தில் சிக்கியுள்ளார்.
அண்ணன்- தங்கை பாசத்தை மையமாக கொண்டு உருவாகும் தொடர் வானத்தை போல, இதனாலேயே நகரம் முதல் குக்கிராமம் வரை பிரபலமடைந்து விட்டது.
இந்த சீரியலில் முத்தையாவாக நடித்து வருபவர் மனோஜ் குமார்(வயது 67), நேற்று காலை அவரது மனைவி செல்வி மற்றும் உதவியாளர் ரகுபதியுடன் தேனி சென்று கொண்டிருந்தார்.
விழுப்புரத்தின் விக்கிரவாண்டி தனியார் கல்லுாரி அருகே காலை 10 மணியளவில் கார் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில், காரில் பயணம் செய்த மூன்று பேரும் காயமடைந்தனர், உடனடியாக அங்கிருந்தவர்கள் காயமடைந்த மூவரையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர், அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.