ரூ. 3000 கோடி சொத்து.., தென்னிந்தியாவின் பணக்கார நடிகர்: யார் தெரியுமா?
தென்னிந்தியாவின் பணக்கார நடிகர்கள் பட்டியலில் ராம் சரண், பிரபாஸ், ரஜினிகாந்த் என பல நடிகர்கள் உள்ளனர்.
அந்தவகையில், தென்னிந்தியாவின் மிகப்பெரிய பணக்கார நடிகர் என்ற அந்தஸ்தை பிரபல நடிகர் நாகார்ஜூனா பெற்றுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி தற்போது இந்தியளவில் பிரபல நடிகராக வலம்வருபவர் நடிகர் நாகார்ஜூனா.
அதுமட்டுமின்றி, பல தெலுங்கு படங்களில் நடித்து தெலுங்கு சினிமாவின் டாப் ஸ்டார் நடிகராக வலம் வந்தவர்.
தென்னிந்திய சினிமாவின் பணக்கார நடிகர் என சொல்லப்படும் நாகார்ஜூனாவின் சொத்து மதிப்பு ரூ.3010 கோடி.
அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் மூலம் ரியல் எஸ்டேட், படம் தயாரிப்பு நிறுவங்களின் முதலீடு செய்துள்ளார்.
மேலும், இவரது சொத்துக்களில் ஹைதராபாத் மற்றும் மும்பையில் உள்ள குடியிருப்புகளும் அடங்கும்.
அதில் ஒரு குடியிருப்பின் மதிப்பு ரூ. 42.3 கோடி, மற்றும் ஜுப்லி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் குடியிருப்பின் மதிப்பு ரூ.50 கோடி என்றும் கூறப்படுகிறது.
இவரிடம் ரூ. 1.5 கோடி மதிப்புள்ள BMW 7series, ரூ. 90.5 லட்சம் மதிப்புள்ள Audi A7, ரூ. 1.76 கோடி மதிப்புள்ள BMW M6, ரூ.2 கோடி ,மதிப்புள்ள porsche Kein மற்றும் பல உயர் ரக ஆட்டோமொபைல் இதில் அடங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |