காளி வேடம் அணிந்து கொண்டு அசிங்கமாக பேசிய பாஸ் லேடி வனிதா! பிரபல நடிகர் வாக்குமூலம்
வனிதா விஜயகுமார் காளி வேடத்தில் இருக்கும் பொழுது நடுவர்களை பற்றி தரக்குறைவாக பேசியதாக நடிகர் நகுல் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
வனிதா விஜயகுமார் என்றாலே சர்ச்சைக்கு பெயர் போனவர் என்று கூறலாம். அவர் எங்கே சென்றாலும் அங்கு பிரச்சனை பூகம்பமாய் வெடிக்கும். இவர் இளம் வயதில் இருக்கும் பொழுது விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
திருமணத்திற்கு பெரிய இடைவெளி எடுத்துக்கொண்டு மீண்டும் சின்னத்திரை பக்கம் என்ட்ரி கொடுத்துள்ளார். தனியார் நிகழ்ச்சி நடத்திய பிக் பாஸ் ஷோவில் கலந்து கொண்டு 'பாஸ் லேடி வனிதா' என்ற பட்டப் பெயரை பெற்றார்.
தற்பொழுது சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளித்திரையிலும் கலக்கி வருகின்றார். சமீபத்தில் இவர் கலந்து கொண்ட பிக் பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் இருந்து விலகி சர்ச்சையை கிளப்பினார்.
இது குறித்து நிகழ்ச்சியின் நடுவரான நகுல் கூறுகையில்:- செட்டில் வனிதா காளி வேடத்தில் இருக்கும் பொழுது நடுவர்களை பற்றி மற்ற போட்டியாளர்கள் முன்னிலையில் தரக்குறைவாக பேசியுள்ளார்.
அவருக்கு மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசுவது சுத்தமாக பிடிக்கவில்லை. என்னை விடுங்க ரம்யா கிருஷ்ணன் எவ்வளவு பெரிய நடிகை. அவரிடம் கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் அசிங்கமாக பேசினார்.
கண்டிப்பாக வனிதா அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.