பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம்
நான் 18 வருடங்களாக விஜய் உடன் பேசுவதில்லை என நெப்போலியன் தெரிவித்துள்ளார்.
நெப்போலியன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்த நெப்போலியன், பின்னர் திமுகவில் இணைந்து எம்.எல்.ஏ மற்றும் எம்.பி ஆக இருந்தார்.
2009 முதல் 2013 வரை மத்திய இணை அமைச்சராக இருந்த அவர், அதன் பின்னர் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்ட அவர், அங்கு ஐடி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தவெக தலைவர் விஜய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
18 வருடமாக பேசவில்லை
இதில் பேசிய அவர், நடிகர்கள் நடிகராக இருக்கும் போது மக்களிடம் இருந்து விலகியே இருக்க வேண்டும். அப்போது தான் அவர்களை பார்க்க வேண்டும் என்ற ஈர்ப்பு மக்களிடம் இருக்கும்.
ஆனால், நடிகர் அரசியல்வாதியாக மாறிவிட்டால் மக்களோடு மக்களாக இருக்க வேண்டும். இரண்டையும் செய்வது கடினமான ஒன்று. ஆனால் அதை பழகிக்கொண்டால் தான் அரசியலில் சாதிக்க முடியும்.
மக்களோடு சென்று நின்று பேசுங்கள். உங்களுக்கு என்ன பிரச்சினைகள் உள்ளது? இந்த ஆட்சியில் என்ன செய்யப்பட்டுள்ளது? என்ன செய்யப்படவில்லை? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதை கூறினால் தான் அவர் தலைவர்.
வண்டியில் மேல் நின்று கொண்டு கையசைத்து விட்டு சென்றால் மக்கள் நடிகராகவே பார்ப்பார்கள். நடிகர்கள் என்றால் கூட்டம் வரத்தான் செய்யும். நான் நடிகராக இருந்த போதும் பிரச்சாரத்திற்கு செல்லும் போதும் எங்கள் கட்சியின் தொண்டர் படை கூட்டத்தை ஒழுங்குபடுத்தும்.
விஜய்யும் அதே போல் தொண்டர் படையை வைத்து கூட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தை நம்பி இருக்க கூடாது.
முதல்வர் பதவி என்பது உயர்ந்த பதிவு. அந்த பதவியை ஏளனமாக பேசக்கூடாது. ஏனென்றால் நீங்களும் அந்த பதவிக்கு ஆசைப்படுறீங்க.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என கூறிவிட்டால் மட்டும் போதுமா? அவருடைய சுபாவம் எங்கள் சினிமாத்துறையில் எல்லாருக்கும் தெரியும். யாரிடமும் நெருங்கி பழகவே மாட்டார்.
எனக்கும் அவருக்குமே 8 வருடங்களுக்கு முன்னர் சில சங்கடங்கள் ஏற்பட்டுள்ளது. அதற்கு பின்னர் அவருடன் பேசுவதும் இல்லை. அவர் படங்களை பார்ப்பதும் இல்லை.
பெற்றோர்களையே வீட்டில் சேர்க்காது ஏன்?
ஒரு நடிகர் அரசியலுக்கு வரும்போது சிலவற்றை மாற்றிக் கொள்ள வேண்டும். அதை மாற்றாவிட்டால், என்றைக்குமே அவரால் தலைவர் ஆக முடியாது.
அவர் என்ன சாதித்து விட்டார் என அவருக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கபடுகிறது? ஏன் அவர் தனி விமானத்தில் வருகிறார். கலைஞர் கருணாநிதி, செல்வி ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் கூட மக்களோடு மக்களாக பயணித்தார்கள்.
அவர் தன்னுடைய தாய் தகப்பனையே கிட்ட சேர்த்துக்கொள்ளவில்லை. மனைவியை கிட்டே சேர்த்துக்கொள்ளவில்லை. மகனை கிட்டே சேர்த்துக்கொள்ளவில்லை. இதை அமெரிக்காவில் உள்ள என்னிடமே சிலர் கேட்கிறார்கள்.
அவருடைய தந்தை அவரை படிப்படியாக வளர்த்து, கால்ஷீட், மற்றும் கதைகளை கவனித்து பெரிய இடத்திற்கு கொண்டு வந்தார். ஆனால் அவரையே வீட்டில் சேர்ப்பதில்லை. இது எந்த விதத்தில் நியாயம்?" என கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |