இன்னொரு திருமணம் செய்துகொள்ள விடமாட்டேன்! 4வது திருமணம் செய்வதாக அறிவித்த நடிகரின் மூன்றாவது மனைவி ஆவேசம்
தெலுங்கு நடிகர் நரேஷ் பிரபல நடிகை பவித்ரா லோகேஷை திருமணம் செய்துகொள்ள போவதாக அறிவித்த நிலையில், அவரது மூன்றாவது மனைவி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மூன்று திருமணம் செய்த 62 வயது நடிகர்
சமீபத்தில் நடிகை பவித்ரா லோகேஷுடன் முத்தமிட்டு வீடியோ ஒன்றை நடிகர் நரேஷ் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அதில் இருவரும் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் அறிவித்தார். ஆனால் அவர் தனது மூன்றாவது மனைவியான ரம்யா ரகுபதியை இன்னும் விவாகரத்து செய்யவில்லை.
இந்த நிலையில் நரேஷ் இன்னொரு திருமணம் செய்ய விடமாட்டேன் என ரம்யா ரகுபதி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
கொந்தளித்த மூன்றாவது மனைவி
இதுகுறித்து அவர் கூறுகையில், 'ஏற்கனவே மூன்று முறை திருமணமாகி தலா ஒரு குழந்தை பெற்ற இவர் எப்படி இவ்வளவு கீழ்த்தரமாக நிற்கிறார். இன்னும் விவாகரத்து செய்யாத நிலையில் எப்படி 4வது திருமணம் செய்துகொள்ள முடியும். அவர் பவித்ரா லோகேஷை திருமணம் செய்துகொள்ள விடமாட்டேன்' என தெரிவித்துள்ளார்.
மேலும், மறைந்த நடிகர் கிருஷ்ணாவுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக நரேஷ் குற்றம் சாட்டியதாகவும், போலி கையெழுத்துடன் கடிதம் எழுதி இருப்பதாகவும் அவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.