விஜயகாந்த் நலமாகவே உள்ளார்.. மிகைப்படுத்தி செய்திகளை பரப்பாதீர்கள்- நேரில் சந்தித்த நாசர் பேட்டி
நடிகர் விஜயகாந்த் நலமாகவே உள்ளார். சமீபத்தில் அவர் குறித்தான செய்திகள் மிகைப்படுத்தியே வருகின்றன என மருத்துவமனையில் நேரில் சந்தித்த நாசர் பேட்டி கொடுத்துள்ளார்.
நடிகர் விஜயகாந்த்
சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விஜயகாந்தின் உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் முன்பு தெரிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து நடிகர் சங்கத் தலைவர் நாசர், ஆர். கே.செல்வமணி, லிங்குசாமி உள்ளிட்டத் திரையுலகத்தினர் விஜயகாந்தை இன்று நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
தற்போது விஜயகாந்த் பேசமுடியாத நிலையில் இருப்பதால், மருத்துவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் சென்று விஜயகாந்தின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.
நாசர் பேட்டி
விஜகாந்த்தை சந்தித்த பின்பு நாசர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது...
'' சமீப நாட்களாக விஜயகாந்த் உடல்நிலை குறித்து வரும் செய்திகள் அனைத்தும் மிகையானவையே. நாங்கள் தலைமை மருத்துவரையும் பார்த்தோம். அவர் வருவார். உங்கள் எல்லாரையும் பார்ப்பார் என மருத்துவர் சொன்னார்.
அதனால் தயவுசெய்து மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை பரப்பாதீர்கள். அவர் உறுப்புகள் நன்றாகவே செயல்படுகின்றன. ஓரிரு மாதங்களுக்கு முன்பு கேப்டன் எப்படி இருந்தாரோ அப்படியே தான் இப்போதும் இருக்கிறார்.
அவர் விரைவில் குணமடைவார் என நம்பிக்கையோடு இருக்கிறோம். அவருக்கு இன்ஃபெக்சன் இருப்பதால் நாங்கள் முகமூடி அணிந்து கொண்டு வெளியில் இருந்து பார்த்தோம்" என்று பேட்டியளித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |