பிரபல நடிகர் நாசருக்கு உடல் ரீதியாக பல பிரச்சனைகளா? வெளியான முக்கிய தகவல்
பிரபல நடிகர் நாசருக்கு உடல் ரீதியாக பல பிரச்சனைகள் இருப்பதாக தகவல்கள் வேகமாக பரவிய நிலையில் அது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் பிரபல குணசித்திர நடிகராக இருப்பவர் நாசர். தென்னிந்திய நடிகர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
இந்த நிலையில் சினிமாவை விட்டு விலக நாசர் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக நாசரின் மனைவியும், தயாரிப்பாளருமான கமீலா நாசர் தனது டுவிட்டரில் நாசரின் உடல்நிலை, நடிப்புத் தொழிலை விட்டு விலகுவது போன்ற . தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
நாசர் இது தொடர்பாக பேசுகையில், என்னை பற்றி தவறான தகவல் பரவி உள்ளது. சினிமாவை விட்டு விலகும் எண்ணம் இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. நான் அதிக படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறேன். தொடர்ந்து நடிப்பேன்.
தற்போது 3 தமிழ் படங்களில் நடித்து வருகிறேன். 3 இந்தி படங்களிலும், ஒரு இந்தி வெப் தொடரிலும் நடிக்கிறேன். 3 தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறேன்.
எனவே தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம்.
என் மூச்சு இருக்கும் வரை நான் நடித்துக் கொண்டே தான் இருப்பேன் என தெரிவித்துள்ளார்.