நடிகர்கள் சிம்பு, கமல் உடன் நடித்துள்ள பிரபல வில்லன், குணச்சித்திர நடிகர் மரணம்!
பிரபல திரைப்பட நடிகர் நெடிமுடி வேணு உடல்நலக்குறைவால் தனது 73வது வயதில் காலமானார்.
தமிழில் இந்தியன், அந்நியன், சிலம்பாட்டம், பொய் சொல்ல போறோம், சர்வம் தாளமயம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளவர் நெடிமுடி வேணு.
இவர் ஏராளமான மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த வேணு சமீபத்தில் தான் அதிலிருந்து மீண்டார்.
இந்த நிலையில் நேற்று வேணுவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிர் பிரிந்தது. நெடுமுடி வேணுவின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.