நடிகர்கள் ரஜினி, தனுஷ் உடன் நடித்துள்ள பிரபல வில்லன், குணச்சித்திர நடிகர் குறைந்த வயதில் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல தமிழ் திரைப்பட நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் காலமானார்.
தமிழ் திரையுலகம் மற்றும் சின்னத்திரையை சேர்ந்த நடிகர்கள் இறப்பு செய்தி சில தினங்களாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, ஐயப்பன் கோபி ஆகியோர் சமீபத்தில் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் பிரபல தமிழ் திரைப்பட நடிகர் நிதிஷ் வீரா (45) கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
வல்லரசு, புதுப்பேட்டை, சிந்தனை செய், காலா, அசுரன், பேரன்பு உள்ளிட்ட ஏராளமான படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நிதிஷ் வீரா நடித்திருக்கிறார்.
அவரின் திடீர் மரணம் ரசிகர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.