எம்.ஜி.ஆர் அறிவுறுத்தலை கேட்டு அதிமுக கொடியை வடிவமைத்த நடிகர் பாண்டு! இவ்வளவு திறமை கொண்டவரா? ஆச்சரிய தகவல்
மறைந்த நடிகர் பாண்டு தான் அதிமுகவின் கொடியை வடிவமைத்தவர் என்ற ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்தவர் பாண்டு. இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாண்டுவும் அவர் மனைவியும் பாதிக்கப்பட்ட நிலையில் பாண்டு இன்று காலமானார்.
இந்த நிலையில் பாண்டு குறித்து பலருக்கும் தெரியாத ஒரு ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் அறிவுறுத்தலின் படி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சி கொடியை வடிவமைத்த பெருமை பாண்டுவையே சேரும் என தெரியவந்துள்ளது.
இதோடு தமிழ்நாடு டூரிஸம் டிபார்ட்மெண்ட் லோகோவும் இவரின் கைவண்ணமே.
ஏனெனில் பாண்டு மிகச்சிறந்த ஓவியர் ஆவார்.