என் அண்ணனே உணவில் Slow Poison வெச்சிட்டார்! மனமுடைந்து பேசிய நடிகர் பொன்னம்பலம்
தனது மூத்த சகோதரர் தனக்கு உணவில் Slow Poison கலந்து கொடுத்ததாக நடிகர் பொன்னம்பலம் மனவேதனை தெரிவித்தார்.
வில்லன் நடிகர்
தமிழில் பிரபல வில்லன் நடிகராக வலம் வந்தவர் பொன்னம்பலம். அதன் பிறகு சமீபத்திய படங்களில் அவர் நகைச்சுவை வேடங்களில் நடித்தார்.
2018ஆம் ஆண்டு சின்னத்திரையில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பொன்னம்பலம் கலந்துகொண்டார். இந்த நிலையில், சிறுநீரக பிரச்சனையால் உடல்நலம் பாதிக்கப்பட்ட நடிகர் பொன்னம்பலம், அதற்காக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது மருத்துவ சிகிச்சைக்கு பல நடிகர்கள், பொதுமக்கள் பணம் கொடுத்து உதவியதாக நேர்காணல் ஒன்றில் கூறியுள்ள பொன்னம்பலம், சில நடிகர்கள் தன்னை தொலைபேசியில் கூட நலம் விசாரிக்கவில்லை என்று வருந்தினார்.
உணவில் விஷம்
மேலும் பேசிய அவர், தனது தந்தையின் 3வது மனைவியின் மகனான தன் அண்ணன், தனக்கு உணவில் மெல்ல கொல்லும் Slow Poison-ஐ கலந்து கொடுத்துவிட்டதாகவும், அதுதான் தனது சிறுநீரக பாதிப்புக்கு காரணம் என மருத்துவர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது வளர்ச்சி கண்டு பொறாமை கொண்டதால் தன் அண்ணன் மாந்திரீகம் உட்பட பல வகையில் கெடுதல் செய்வதில் ஈடுபட்டதாவும் பொன்னம்பலம் குறிப்பிட்டார்.