வெளியான நடிகர் பிரபாஸின் ஆதார் கார்டு.., அவரின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?
பான் இந்தியா நடிகரான பிரபாஸ் தற்போது தொடர்ச்சியான படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
அடுத்தடுத்து இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்த பிரபாஸ், அடுத்து ராஜாசாப் படத்தின் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறார்.
பாகுபலி தொடரின் வெற்றிக்குப் பிறகு உலகளவில் மிகவும் பிரபலமான நடிகராக பிரபாஸ் வலம் வருகிறார்.
இந்நிலையில், பிரபாஸின் ஆதார் கார்டு என்ற பெயரில் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது.
அதில் பிரபாஸின் முழுப் பெயர், பிறந்த தேதி, ஆதார் எண் போன்ற விவரங்கள் உள்ளன.
இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ள ஆதார் கார்டின்படி, பிரபாஸின் இயற்பெயர் உப்பலபாடி வெங்கட சூர்யநாராயண பிரபாஸ்.
பிறந்த தேதி 23-10-1979 எனவும் , ஆதார் எண் 5986 6623 9932 என அந்த ஆதார் கார்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த ஆதார் தகவல்கள் உண்மையா இல்லையா என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
ஆனாலும், சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடையே பிரபாஸின் ஆதார் கார்டு மிகவும் வேகமாகப் பரவி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |