நடிகர் பிரகாஷ் ராஜுக்கு என்ன ஆனது? விபத்து குறித்து அவரே வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்
பிரபல திரைப்பட நடிகரான பிரகாஷ் ராஜ் திடீரென விபத்தில் சிக்கியதால், கையில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவுள்ளதாக கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரகாஷ்ராஜ்.
இவர் சென்னையில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 9-ஆம் திகதி, இவர் கோவளத்தில் உள்ள தனது வீட்டில் சறுக்கி விழுந்துவிட்டார்.
இதனால் அவருக்கு இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார்.
A small fall.. a tiny fracture.. flying to Hyderabad into the safe hands of my friend Dr Guruvareddy for a surgery. I will be fine nothing to worry .. keep me in your thoughts ??????
— Prakash Raj (@prakashraaj) August 10, 2021
தற்போது ஹைதராபாத்தில் முறைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காகச் சென்றுள்ள பிரகாஷ்ராஜ், இது தொடர்பாக தனது டுவிட்டர் பதிவில், ஒரு சிறிய விபத்து, லேசான எலும்பு முறிவுதான், இருந்தாலும் எனது பாதுகாப்பு கருதி ஹைதராபாத்தில் உள்ள நண்பர் டாக்டர் குருவாரெட்டியிடம் செல்கிறேன்.
எல்லாம் சரியாகிவிடும். கவலை வேண்டாம். அன்புடன் என்னை நினைவில் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.