முதல் மனைவியால் ஏமாற்றப்பட்ட நடிகர் பிரசாந்த்! 48 வயதில் மறுமணம் செய்ய முடிவு?
நடிகர் பிரசாந்த் மறுமணம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் பிரசாந்துக்கு 2005-ஆம் ஆண்டு கிரகலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. இந்த நிலையில் கிரகலட்சுமி ஏற்கனவே திருணமானவர் என தெரிய வந்ததும் 2007-ம் ஆண்டு பிரசாந்த் கிரகலட்சுமியை விட்டுப் பிரிந்தார்.
இதையடுத்து தன்னை ஏமாற்றிய மனைவியிடம் இருந்து அவர் விவாகரத்து பெற்றார். தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சறுக்கல்கள் காரணமாக சினிமாவிலும் பிரசாந்த் மார்க்கெட்டை இழந்தார்.
தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது அப்பா தியாகராஜன் இயக்கி, தயாரிக்கும் அந்தகன் படத்தில் நடித்து வருகிறார் பிரசாந்த்.
இந்நிலையில் தற்போது 48 வயதாகும் பிரசாந்துக்கு இரண்டாவது திருமணம் செய்ய தீவிர ஏற்பாடுகள் நடந்து வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து இந்தாண்டு இறுதிக்குள் அவரின் திருமணம் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.