இறந்த பின்பும் நான்கு பேர் மூலமாக உயிர் வாழும் நடிகர் புனித் ராஜ்குமார்! அப்படி என்ன செய்தார் தெரியுமா?
நடிகர் புனித் ராஜ்குமார் இறந்த பின்பும் தனது கண்களை தானம் கொடுத்து நான்கு பேர் மூலமாக வாழ்ந்து வருகிறார்.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் புனித் ராஜ்குமார். இந்நிலையில் இவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் பெங்களூரில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. இவர் யாருக்கும் தெரியாமல் பலருக்கும் உதவியுள்ளார்.
சுமார் 1800 மாணவர்களின் கல்வி செலவை அவரே ஏற்று கொண்டு படிக்க வைத்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் முதியோர் இல்லம், ஆதரவு இல்லம் போன்றவை அவரது சொந்த செலவில் நடித்து வந்துள்ளார்.
உயிரோடு இருக்கும் போதும் உதவி செய்தவர் இறந்த பிறகும் தனது கண் மூலம் நான்கு பேருக்கு பார்வை கிடைத்துள்ளது. அதாவது கருவிழியை இரண்டு துண்டுகளாக்கி முதல் பாதி ஒருவருக்கும் மற்றொரு பாதி இரண்டாமவருக்கும் பொருத்தப்பட்டது. இதுபோல நான்கு பேருக்கு கண்பார்வை கிடைத்துள்ளது.
இதன்மூலம் புனித் ராஜ்குமார் இறந்த பின்னரும் தன்னுடைய கண்களின் மூலமாக இந்த உலகத்தை பார்த்துக்கொண்டிருக்கிறார் என அவருடைய ரசிகர்கள் அவரின் மனதை பாராட்டி கொண்டாடி வருகின்றனர்.