என் கணவருக்கு திருட்டு பட்டம் கொடுத்து கொன்னுட்டாங்க! கடவுள் சும்மாவிடமாட்டார்: பிரபல சீரியல் நடிகை வேதனை
பிரபல சீரியல் நடிகையான ராகவி தன்னுடைய கணவரை திருட்டு பட்டம் கொடுத்து கொன்றுவிட்டதாக வேதனையுடன் கூறியுள்ளார்.
கடந்த 1986-ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ராஜா சின்ன ரோஜா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக, திரையுலகில் அறிமுகமான நடிகை ராகவி. அதன் பின் சீரியல்களில் நடித்து பிரபலமான இவர் சசிகுமார் என்பவரை 8 ஆண்டுகளாக காதலித்து, அதன் பின் இருவீட்டாரின் சம்மதத்துடன், திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து 13 ஆண்டுகளாக இவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென்று கடந்த 2019-ஆம் ஆண்டு சசிகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது ராகவி குடும்பத்தினருக்கு பெரும் வேதனையை கொடுத்த நிலையில், இது குறித்து அவர் தற்போது கூறுகையில், வேலைக்கு சென்ற இடத்தில், என் கணவர் கமெராவை திருடிவிட்டதாக திருட்டு பட்டம் கொடுத்து, அவரை அதிக மன உளைச்சலுக்கு ஆளாக்கினர்.
அவரை இப்படி சொல்லி, சொல்லியே அழுத்தம் கொடுத்து கொன்றுவிட்டனர். இது குறித்து என்னிடம் அவர் மனம் விட்டு பேசியிருந்தாலே, இந்த பிரச்சனையை நான் எப்படியாவது மீட்டிருப்பேன், ஆனால், என்னிடம் எதுவுமே சொல்லாமல் வெளியூர் செல்வதாகக் கூறிவிட்டு சென்றார்.
அதன் பின், திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார் என்கிற செய்தி வந்ததும் நான் இடிந்தே போய்விட்டேன். என் குழந்தைக்காக என்னை என் அம்மா எவ்வளவோ போராடி தேற்றினார்.
நிச்சயம் என் கணவர் மரணத்திற்கு காரணமானவர்களை கடவுள் சும்மா விடமாட்டார் என சாபம் விட்டுள்ளார். கணவர் நினைவில் இருந்து நான் மீள வேண்டும் என்பதற்காக வீடு முழுவதும் அவருடன் இருக்கும் புகைப்படங்களை எல்லாம் சொந்தக்காரர்கள் அகற்ற சொன்னார்கள்.
ஆனால், அவர் நினைவு எப்போதுமே என் நெஞ்சில் நிறைந்து இருப்பதால் ஒரு புகைப்படத்தை கூட அகற்ற மாட்டேன் என உறுதியாக சொல்லி விட்டேன் என்று உருக்கமாக கூறியுள்ளார்,