மக்களை தெருநாய்களுடன் ஒப்பிட்டு பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ்? வெடித்த சர்ச்சை
நடிகர் ராகவா லாரன்ஸ் மக்களை தெருநாய்களுடன் ஒப்பிட்டு பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
ராகவா லாரன்ஸ்
அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என நீங்கள் கூறுங்கள் என நடிகர் ராகவா லாரன்ஸ் வீடியோ வெளியிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த ஒரு மாத காலமாக தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி சிறப்பாக உள்ளது.
பொறாமை காரணமாக தமிழக வெற்றிக் கழக ஆட்சியை விமர்சிக்கின்றனர். அரசியலுக்கு வருவது தொடர்பாக நல்ல முடிவை அறிவிக்க இருக்கிறேன்.
தெரு நாய்களுக்கு கூட அவற்றிற்கு பிடித்த உணவை கொடுக்க வேண்டும். அதே போன்று மக்களுக்கு தேவையானதை அறிந்து செய்ய கால அவகாசம் தேவை என்று கூறினார்.
மக்களைப் பற்றி பேசும்போது தெருநாய்களை நடிகர் லாரன்ஸ் குறிப்பிட்டது தற்போது புதிய சர்ச்சையாக எழுந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |