ஜெய் பீம் படத்தின் உண்மை நாயகிக்கு நான் வீடு கட்டி தருகிறேன்! நடிகர் ராகவாலாரன்ஸ் உருக்கம்
பிரபல திரைப்பட நடிகரான ராகவா லாரன்ஸ், பார்வதி அம்மாவிற்கு தன்னுடைய சொந்த செலவில் வீடு கட்டித் தருவதாக கூறியுள்ளார்.
சமீபத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ஜெய்பீம் படம், தமிழக மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் உண்மை அடிப்படையில் எடுக்கப்பட்டதால், மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
பொலிசாரின் செயலால், செய்யாத குற்றத்திற்காக ராசாக்கண்ணு என்ற அப்பாவி நபர்(ஜாதி அடிப்படையில்) எப்படி துன்புறுத்தப்பட்டு இறக்கிறார் என்பதை வெளிச்சம் போட்டு இப்படம் காட்டியிருக்கும்.
A house for Rajakannu’s family ?? #JaiBhim #Suriya @Suriya_offl @2D_ENTPVTLTD @rajsekarpandian @tjgnan @jbismi14 @valaipechu pic.twitter.com/nJRWHMPeJo
— Raghava Lawrence (@offl_Lawrence) November 8, 2021
இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், செய்யாத குற்றத்திற்காக, சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட ராசாக்கண்ணுவின் மனைவி, பார்வதி அம்மாளின் இன்றைய வாழ்க்கை நிலையை கேள்விப்பட்டேன்.
இது என்னை மிகவும் பாதித்தது. என்னுடைய சொந்த செலவில் பார்வதி அம்மாவிற்கு நான் வீடு கட்டி தருகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.