டெல்லி கணேஷ் அற்புதமான மனிதர்: நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
மூத்த நடிகர் டெல்லி கணேஷின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் வயது மூப்பினால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தளத்தில் டெல்லி கணேஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தனது பதிவில், "என்னுடைய நண்பர் டெல்லி கணேஷ் அருமையானதொரு மனிதர். அற்புதமான நடிகர். அவருடைய மறைவு செய்தி செய்தி கேட்டு நான் மனம் வருந்துகிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி" என கூறியுள்ளார்.
ரஜினிகாந்துடன் எங்கேயோ கேட்ட குரல், புதுக்கவிதை, ஸ்ரீ ராகவேந்திரர், மூன்று முகம், பாபா உள்ளிட்ட பல படங்களில் டெல்லி கணேஷ் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |