அற்புதமான மனிதர்.., மன்மோகன் சிங் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் இரங்கல்
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரதமர் மன்மோகன் சிங் (92) வயது மூப்பின் காரணமாக நேற்று (டிசம்பர் 26) இரவு உயிரிழந்தார்.
டெல்லியில் உள்ள வீட்டில் குடும்பத்தினர் மற்றும் அவரது முக்கிய பிரமுகர்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. இதையடுத்து, காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மறைந்த மன்மோகன் சிங்கிற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அவரது உடலுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், "முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஒரு அற்புதமான தலைவர்.
அவர் சிறந்த பொருளாதார சீர்திருத்தவாதி, அரசியல் பண்பாளர். அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்" என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |