பண்ணைபுரம் TO லண்டன்.., இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்
இசைஞானி இளையராஜா லண்டனின் சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் வாழ்த்து
திரைத்துறையில் 1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், முதன்முறையாக சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.
லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் இந்த சிம்பொனி இசை நிகழ்ச்சி இன்று பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.
இதனால், சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பலரும் இளையராஜாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள், இன்று லண்டனில் சிம்பொனி படைக்கிறது.
சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை! பாராட்டுகள்" என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |