விவேக்கின் மறைவு வேதனை அளிக்கிறது! நடிகர் ரஜினிகாந்த் வருத்தத்துடன் வெளியிட்ட அறிக்கை
நடிகர் விவேக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ரஜினிகாந்த் அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் ரஜினிகாந்த் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சின்னக் கலைவாணர், சமூக சேவகர் என்னுடைய நெருங்கிய நண்பர் விவேக் அவர்களுடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது.
சிவாஜி படப்பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள்.
அவரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆந்த அனுதாபங்கள். விவேக்கின் ஆத்மா சாந்தி அடையட்டும்.
இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
#RipVivek pic.twitter.com/MSYVv9smsY
— Rajinikanth (@rajinikanth) April 17, 2021