பஹல்காம் தாக்குதல் குறித்து ஆவேசமாக பேசிய நடிகர் ரஜினிகாந்த்
காஷ்மீரில் அமைதியான சூழல் நிலவுவது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் கருத்து
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
‘ஜெயிலர் 2’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "காஷ்மீரில் அமைதியான சூழல் நிலவுவது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை. அதனை கெடுக்க வேண்டும் என்று இவ்வாறு செய்கிறார்கள்.
அதனை செய்தவர்களுக்கும், அதன் பின்னால் இருப்பவர்களுக்கும் விரைவில் கடுமையான தண்டனை வாங்கி தர வேண்டும். இதே மாதிரி மீண்டும் செய்ய கனவிலும் நினைக்க கூடாது. இந்திய அரசு அதனை சீக்கிரம் செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |