வீட்டின் தோட்டத்தில் வழுக்கி விழுந்த நடிகர் ரஜினிகாந்த்.., வைரல் வீடியோ உண்மையா?
தென்னிந்தியா சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களுள் ஒருவர் ரஜினிகாந்த்.
நடிகர் ரஜினிகாந்த் வாழ்வில் அவர் விட்டுக்கொடுக்காத விஷயங்களுள் ஒன்று, தினமும் காலையில் நடைப்பயிற்சிக்கு செல்வது.
இவர் இல்லம் அமைந்திருக்கும் போயஸ் கார்டன் தெருவில் அதிகாலையில் இவர் நடைப்பயிற்சி செல்வதை பார்க்கலாம் என்று ராசிக்காரர்கள் பலரும் வீடியோ பதிவிட்டுள்ளார்.
ஆனால், சில சமயங்களில் ரஜினி என்று நினைத்துக்கொண்டு வேறு சில நபர்களை கூட ரசிகர்கள் போட்டோ எடுத்து வைரலாக்கியிருக்கின்றனர்.
அந்தவகையில், தற்போது அப்படிப்பட்ட வீடியோக்களில் ஒன்றுதான் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் ஒருவர் தன் வீட்டின் தோட்டத்தில் நடந்து செல்லும்போது, வழுக்கி விழுகிறார். பின்னர் மீண்டும் எழுந்து, சென்று விடுகிறார்.
Coolie Rajini Title Card
— Flop Kumar Ajith 2.0 (@Flopkumarajith2) July 29, 2025
Scene Leaked 😱🔥
Dey @Dir_Lokesh Mass Ya Nee 😎🔥
Rajini Screen Presence 🥵#JanaNayagan #ThalapathyVijay#Coolie #CoolieThePowerHouse #CoolieLeaked pic.twitter.com/6jqXhP9OBk
இந்த வீடியாே, ஒரு வீட்டின் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதில் இருப்பவரின் முகம் சரியாக தெரியவில்லை. ஆனால், இவரது முக ஜாடை அப்படியே ரஜினிகாந்த் போல இருப்பதாக பலர் கூறி வந்தனர்.
ரஜினியை பிடிக்காத இன்னும் சிலர், இந்த வீடியோவை வைத்து எடிட் செய்து, ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.
இந்நிலையில், இந்த வீடியோவில் இருப்பவர் ரஜினிகாந்த் இல்லை என்றும், ரஜினி, தற்போது நலமாக உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |