திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு பிறகு…கர்ப்பமான பிரபல தெலுங்கு நடிகரின் மனைவி
தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோவான ராம்சரணின் மனைவி உபாசனா திருமணம் ஆகி 10 ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பமாக இருப்பதாக சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி-யின் குடும்பம் தெரிவித்துள்ளது.
முன்னணி ஹீரோவான ராம்சரண்
தெலுங்கு சூப்பர் ஸ்டார் என போற்றப்படும் சிரஞ்சீவி-யின் மகனான ராம்சரண் தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார்.
எஸ்.எஸ் ராஜமெளலி-யின் இயக்கத்தில் ராம்சரண் நடித்த மகதீரா(தமிழில் மாவீரன்) திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து, சினிமா ரசிகர்கள் மத்தியில் ராம்சரண் தனது அடையாளத்தை நிலைநிறுத்திக் கொண்டார்.
Ram Charan & wife Upasana Konidela-ராம் சரண் & மனைவி உபாசனா கொனிடேலா
இதையடுத்து, ராசா, நாயக், எவடு, துருவ, ரங்கஸ்தலம் என வரிசையாக சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த ராம்சரண், சமீபத்தில் மீண்டும் எஸ்.எஸ் ராஜமெளலி-யின் இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் நடித்து இந்தியா முழுவதும் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டினார்.
10 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை
தெலுங்கு நடிகர் ராம்சரணுக்கும் உபாசனாவுக்கும் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், 10 ஆண்டுகளாக இவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மற்றும் ராம்சரணின் தந்தையாக சிரஞ்சீவி, ராம்சரண் மற்றும் உபாசனா தம்பதி தங்களது முதல் குழந்தையை எதிர்நோக்கி ஆவலுடன் காத்து இருக்கின்றனர் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
— Chiranjeevi Konidela (@KChiruTweets) December 12, 2022
இது தொடர்பாக ட்விட்டரில் சிரஞ்சீவி வெளியிட்ட பதிவில், “ஶ்ரீ ஹனுமான் ஆசியுடன், உபாசனா மற்றும் ராம் சரண் தங்களின் முதல் குழந்தையை வரவேற்க உள்ளார்கள் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்” என தெரிவித்துள்ளார்.
ராம்சரண்-உபாசனா தம்பதி குழந்தையை எதிர்நோக்கி காத்து இருக்கும் நிலையில், அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.