நடிகர் ராம்சரணின் மிரள வைக்கும் சொத்து மதிப்பு

Sivaraj
in பொழுதுபோக்குReport this article
தெலுங்கில் பிரபலமான நடிகரான ராம் சரணின் சொத்து மதிப்பு குறித்து இங்கே காண்போம்.
ராம்சரண்
மெகாஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண், 2007ஆம் ஆண்டில் வெளியான 'சிறுத்த' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
அதன் பின்னர் அவர் நடித்த மகதீரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து ரச்சா, நாயக் போன்ற வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார்.
சமீபத்தில் வெளியான கேம் சேஞ்சர் படத்திற்காக ராம்சரண் ரூ.65 கோடி ஊதியம் பெற்றதாக கூறப்படுகிறது. நடிப்பு மட்டுமன்றி படத்தயாரிப்புகளிலும் இவர் ஈடுபட்டுள்ளார்.
அத்துடன் சொந்தமான பிராண்டுகள், நிறுவனங்கள் ராம்சரணுக்கு உண்டு மற்றும் சில தொழில்களில் முதலீடும் செய்கிறார்.
சொத்து மதிப்பு
தி எகனாமிக் டைம்ஸ் மற்றும் பொதுவில் கிடைக்கும் தரவுகளின்படி, ராம்சரணின் சொத்து ரூ.1,370 கோடி ஆகும்.
ராம்சரண் போலோ கிளப் மற்றும் ஸ்டார்ட்-அப்கள் உட்பட பல துறைகளில் முதலீடு செய்துள்ளார்.
ஐதராபாத் போலோ ரைடிங் கிளப்பில் குதிரை சவாரி செய்வதை ராம்சரண் விரும்புகிறார்.
ஜூபிலி ஹில்ஸில் உள்ள ராம்சரணின் 25,000 அடி பங்களா ரூ.30 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.
ரோல்ஸ் ராய்ஸ், ஆஸ்டன் மார்ட்டின் வண்டேஜ் வி8, பெர்ராரி போர்டோபினோ, மெர்சிடிஸ் மேபாக் GLS 600 மற்றும் Lexus LM MPV ஆகிய சொகுசு கார்களை ராம்சரண் வைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |