11 ஆண்டுகால காத்திருப்பிற்கு பின் தந்தையான நடிகர் ராம்சரண்
பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் - உபாசனா தம்பதிக்கு 11 ஆண்டுகளுக்கு பின் முதல் குழந்தை பிறந்துள்ளது.
முன்னணி நடிகர்
தெலுங்கில் சூப்பர் ஸ்டார் நடிகரான சிரஞ்சீவியின் மகன் ராம்சரண். இவரும் பல பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்து முன்னணி கதயநாயகனாக வலம் வருகிறார்.
குறிப்பாக, இவர் கடைசியாக நடித்த RRR திரைப்படம் இந்திய அளவில் பிரம்மாண்ட வெற்றி பெற்றதுடன், அதில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்காக ஆஸ்கர் விருதையும் வென்றது. ராம்சரண் கடந்த 2012ஆம் ஆண்டில் உபாசனா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
தம்பதியாக மட்டுமே வாழ்ந்து வந்த இந்த ஜோடி தற்போது பெற்றோராக மாறியுள்ளது. கர்ப்பமாக இருந்த ராம்சரண் மனைவி உபாசனா நேற்று இரவு பிரசவ வலி ஏற்படவே, ஜூபிலி ஹில்ஸில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதல் குழந்தை
அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. திருமணமாகி 11 ஆண்டுகளுக்கு பின்னர் ராம்சரண் - உபாசனா தம்பதி தங்கள் முதல் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ராம்சரண் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |