உறவுகள் புதையுண்ட மண் இது! மில்லர் படவிழாவில் நடிகர் ரஞ்சித் உருக்கம் (காணொளி)
ஐபிசி தமிழ், பாஸ்கரன் கந்தையா தயாரிப்பில் உருவாகியுள்ள 'மில்லர்' ஈழ திரைப்படத்தின் விழாவில் நடிகர் கலந்துகொண்டு பேசினார்.
மில்லர் திரைப்படம்
அவர் பேசும்போது, எத்தனை தாய்மார்களின் குருதி இந்த மண்ணுக்குள் இருக்கிறது; எத்தனை உறவுகள் நம்மைவிட்டு பிரிந்திருக்கிறது.
உங்களை எல்லாம் பார்க்கும்போது என் தொப்புள்குடி உறவுகளான என் அண்ணன், என் அம்மா, என் தங்கை, என் பாட்டி என என் உறவைப் பார்த்த உணர்வில் இந்த விழாவிற்கு வந்திருக்கிறேன்.
ஆயிரம் வலிகளை தாங்கிய பூமி இது; ஒவ்வொரு மண்ணும் ஒவ்வொரு கதை சொல்லும். ஆனால் இந்த மண்தான் நம் வலிகளை, நம் உணர்வை சொல்லும்.
இந்த தமிழ் உறவில் நானும் ஒரு உறவாக நீங்கள் என்னை அழைத்தது எனக்கு ஒரு பாக்கியம். அதற்காக நான் ரொம்ப பெருமைப்படுகிறேன்; ரொம்ப நன்றி.
இந்த பூமியில் எல்லோரும் இந்த இனம் மண்ணோடு மண்ணாக அழிந்துவிடும் என்று நினைத்த தருவாயில் கூட, என்னால் ஒரு ஆலமரமாக உருவாக முடியும் என்று எடுத்துக்காட்டாக உங்களைப் போல் நிறைய நல்ல உள்ளங்கள் இருக்கிறது என்று பாராட்டினார்.
மேலதிக தகவல்களுக்கு காணொளியை காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |