40 ஆண்டுகளாக பிரேஸ்லெட்டை கழட்டாமல் அணிந்திருக்கும் நடிகர் சல்மான் கான்: ஏன் தெரியுமா?
கோடிக்கணக்கான இளம்பெண்களின் கனவு நாயகனாகத் திகழ்ந்து வருபவர் நடிகர் சல்மான் கான்.
சல்மான் கான் ஒரு இந்திய நடிகர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார்.
ஹிந்தித் திரையுலகில் மிகவும் பழம்பெரும் மற்றும் வெற்றிகரமான நடிகர்களில் ஒருவராக சல்மான் கான் மாறியுள்ளார்.
இவர் ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்து ஆயிரம் கோடி ரூபாய் வசூல் படங்களை கொடுத்து வருபவர் சல்மான்கான்.
அந்தவகையில், நடிகர் சல்மான் கான் தனது பாதுகாப்பிற்க்காக பெரிதும் நம்புவது ஒரு பிரேஸ்லெட்டைத்தான்.
கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பிரேஸ்லெட்டை கழற்றாமல் அணிந்தபடி இருக்கிறார்.
அந்த பிரேஸ்லெட்டில் உள்ள பச்சையும் நீலமும் கலந்த பிரோசா என்ற கல்தான் தனக்கு பாதுகாப்பு என கருதுகிறார் சல்மான் கான்.
சல்மானுக்கு இந்தக் கல்லை கொடுத்தது அவரது தந்தைதானாம்.
இதனை ஒருமுறை பேட்டியில் வெளிப்படுத்திய சல்மான் கான், "நான் சிறுவயதில் என் தந்தை இதை அணிந்ததை பார்த்து வளர்ந்தேன். எனக்கு பின்னர் அதைத் தந்தார்.
இந்த உலகில் உயிருள்ள கற்கள் இரண்டு. ஒன்று கிரீக். மற்றொன்று இந்த பிரோசா.
இதை அணிந்தால் நெகட்டிவ் விஷயங்கள் நம்மை அண்டாது. நம்மை நோக்கி எது வந்தாலும் இது உள்வாங்கிக் கொண்டு நம்மைக் காக்கும்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |