சஞ்சீவ் முதலில் யார் மகன்னு தெரியுமா? அவருடைய உறவுமுறை பற்றி பதிவிட்ட வனிதா
பிரபல திரைப்பட நடிகையான வனிதா, நடிகர் சஞ்சீவ்விற்கும், தனக்கும் இருக்கும் உறவு முறைப் பற்றி பதில் அளித்துள்ளார்.
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும், நடிகையுமான வனிதா சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சில புகைப்படங்களை பதிவு செய்திருந்தார். அதில், பிரபலங்கள் பலருடன் அவர் இருப்பது போன்று இருந்தது.
குறிப்பாக பிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி, விஜய்யின் நெருங்கிய நண்பரும், நடிகருமான சஞ்சீவ், ப்ரீதா ஆகியோர் இருந்தனர்.
குறிப்பாக சஞ்சீவ்வுடன் எடுத்த செல்பியின் போது, வனிதா, அவர் என்னுடைய சகோதரர் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதைக் கண்ட இணையவாசிகள் பலர் அவர் எப்படி உங்களுக்கு சகோதரர் ஆவார் என்று கேள்வி எழுப்ப, உடனே வனிதா, முதலில் அவர் யார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
தன்னுடைய தாயார் மஞ்சுளாவின் சகோதரி ஷ்யாமளா மகன் தான் சஞ்சீவ். இதன் காரணமாகவே நான் சஞ்சீவ் எனக்கு சகோதரர் குறிப்பிட்டுள்ளேன என்று பதிவிட்டார்.
]
இதைக் கண்ட பலரும், சஞ்சீவ்வும்-வனிதாவுக்கும் இடையே இப்படி ஒரு இரத்த பந்தமா? இருவரும் அக்க-தம்பி உறவு முறை கொண்டவர்களா? என்று ஆச்சரியமுடன் பதிவிட்டு வருகின்றனர்.