பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகும் பிரபல நடிகர்.., யார் தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ்.
முதல் சீசன் கொடுத்த வெற்றி அடுத்தடுத்து சீசன்கள் ஒளிபரப்பாக விரைவில் 8வது சீசன் வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 7 சீசனாக சுவாரசியம் குறையாமல் தொகுத்து வழங்கியவர் நடிகர் கமல்ஹாசன்.
பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், பிக்பாஸ் என்றாலே கமல்ஹாசன் தான் என்று ரசிகர்களுக்கு பதிந்துவிட்டது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து தான் விலகுவதாக பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
கமல்ஹாசனின் இந்த அறிவிப்பை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் அடுத்து எந்த பிரபலம் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கமல்ஹாசனுக்கு பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது குறித்து பல பிரபலங்களின் பெயர் அடிபட்டு வருகிறது.
அந்தவகையில், பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வாங்கப்போகும் பிரபலம் நடிகர் சரத்குமார் என்றும், இதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |