நகைச்சுவை நடிகர் பாண்டுவின் மறைவு செய்தி எனக்கு.... நடிகர் சரத்குமார் வேதனையுடன் வெளியிட்ட பதிவு
நகைச்சுவை நடிகர் பாண்டு மறைவிற்கு சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு. சின்னத் தம்பி, திருமதி பழனிசாமி, உள்ளத்தை அள்ளித்தா, காதல் கோட்டை, ஏழையின் சிரிப்பில், வரலாறு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் கொரோனா பாதிப்பின் காரணமாக பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா இருவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தனர்.
சிறந்த குணச்சித்திர நடிகரும், என்னுடன் பல திரைப்படங்களில் உடன் நடித்தவரும், நல்ல நண்பருமான பாண்டு மறைந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் #RipPandu
— R Sarath Kumar (@realsarathkumar) May 6, 2021
இந்த சூழலில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்று பாண்டுவின் உயிர் பிரிந்தது.
பாண்டு மறைவு குறித்து நடிகர் சரத்குமார் டுவிட்டரில், சிறந்த குணச்சித்திர நடிகரும், என்னுடன் பல திரைப்படங்களில் உடன் நடித்தவரும், நல்ல நண்பருமான பாண்டு மறைந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
அவரது குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் #RipPandu என பதிவிட்டுள்ளார்.