''நடிகர் சங்கத்தின் அடையாளமே விஜயகாந்த் தான்''.., நடிகர் சதிஷ் உருக்கம்
மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் குறித்து நடிகர் சதிஷ் உருக்கமாக பேசியுள்ளார்.
நடிகர் சதிஷ்
நடிகர் சதிஷ் நடிப்பில் வெளியான கான்ஜுரிங் கண்ணப்பன் திரைப்படம் 25 நாள்களாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
திருப்பூரில் உள்ள ஸ்ரீ சக்தி சினிமாஸில் கான்ஜுரிங் கண்ணப்பன் படத்தின் 25 வது நாள் வெற்றிவிழா கொண்டாட்டத்தை படக்குழுவினர் கொண்டாடினார்கள்.
இதில் படத்தின் நாயகன் சதீஷும் கலந்து கொண்டனர். திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து படத்தைப் பார்த்தவர், ரசிகர்களுடன் கலந்துரையாடினார். பின் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
நடிகர் விஜயகாந்தின் மறைவையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக அவர் குறித்த குறும்படம் ஒன்று திரையிடப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின் நடிகர் சதிஷ் பத்திரிக்கையாளர் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அந்த பேட்டியில் மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் குறித்து உருக்கமாக கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது...
''தற்போதைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் 25 நாட்கள் ஓடுகிறது என்றால் அது 100 நாட்களுக்கு சமம். அந்த வகையில் கான்ஜுரிங் கண்ணப்பன் வெற்றிகரமாக ஓடி வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பேன்.
மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் மரியாதை செய்வது என்பது நடிகர் சங்கத்திற்கு பெருமை. நடிகர் சங்கத்தின் ஒரு அடையாளமே விஜயகாந்த் தான்'' என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |