ஈழத்தமிழர் நலனுக்காக என் மகள் தொடர்ந்து உழைப்பார்- நடிகர் சத்யராஜ் அறிக்கை

Sathyaraj
By Fathima Mar 22, 2023 10:19 AM GMT
Report

பசுமைப்பள்ளி, பசுமை சமுதாயம் திட்டத்தில் ஈழத்து செல்வா பேத்தியுடன் தனது மகள் இணைந்து செயல்படுகிறார் என்றும், ஈழத்தமிழர்களின் நலனுக்காக தன் மகள் தொடர்ந்து உழைப்பார் என்றும் நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.

நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

செல்வாவின் பேத்தியுடன்...

இலங்கையில் உள்ள வடக்கு மாகாண பகுதியில் அமைந்திருக்கும் நெடுந்தீவில் பசுமைப்பள்ளி, பசுமை சமுதாயம் என்ற பெயரில், ஈழத்து காந்தி என்று அழைக்கப்படும் தந்தை செல்வாவின் பேத்தி பூங்கோதை சந்திரஹாசனும், என் மகள் திவ்யாவும் இணைந்து ஒரு அற்புதமான திட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இதில் நான் மிகவும் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன். இந்தத்திட்டத்தில் பயனுள்ள விஷயங்கள் அடங்கியிருக்கிறது.

ஈழத்தமிழர் நலனுக்காக என் மகள் தொடர்ந்து உழைப்பார்- நடிகர் சத்யராஜ் அறிக்கை | Actor Sathyaraj Statement

முதலாவது, குழந்தைகளின் கல்வி, எதிர்காலம் மற்றும் விவசாயம் என்ற அற்புதமான தொழிலை கற்றுக்கொள்வது அதில் அந்த குழந்தைகளின் பெற்றோரையும் ஈடுபடச்செய்வது எனப்பல விஷயங்கள் அடங்கியிருக்கிறது.

அவர்களுக்கு ஒரு புதிய தொழிலை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு அமைய இருக்கிறது.

இந்தப்பணிகளில் பூங்கோதை சந்திரஹாசனும், என் மகள் திவ்யாவும் இணைந்து செயல்படுவதை நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.

தொடர்ந்து உழைப்பார்

இந்தநேரத்தில், எம்.ஜி.ஆரின், நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி, சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி என்ற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. ஈழத்தமிழர்களின் நலனுக்காக என் மகள் திவ்யா தொடர்ந்து உழைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர் நலனுக்காக என் மகள் தொடர்ந்து உழைப்பார்- நடிகர் சத்யராஜ் அறிக்கை | Actor Sathyaraj Statement

இந்த முயற்சியின் விபரம் பின்வருமாறு,

இலங்கையின் தற்போதைய அவல நிலை

ஐ.நா அறிக்கையின் படி 3.4 மில்லியன் இலங்தக மக்களுக்கு உயிர்காக்கும் உதவிகள் தேவைப்படுவதாகவும், கமலும் 28% மக்கள் உணவுத் தட்டுப்பாட்டிற்கு முகம் கொடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

40% பள்ளிமாணவர்கள் உணவுத் தட்டுப்பாட்டால் பள்ளி சசல்வததத் தொடர முடியாமல் உள்ளதாகவும், B.B.C அறிக்தகயின் படி இலங்தகயின் சில பள்ளிகளில் குழந்தைகள் பசியின் கொடுமையால் மயங்கி விழுவதாகவும், ஆசிரியர்கள் தினசரி குழந்தைகளுக்கு உணவு எடுத்து வருவதால், அந்த ஒரு வேளை உணவிற்காகக் குழந்தைதகள் பள்ளிக்கு வருவதாகவும், வேதனை தரும் செய்தியாக அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

 “பசுமைப் பள்ளி - பசுமைபுரட்சி” திட்டத்தின் நோக்கம்

" குழந்தைகள் ஒரு தேசத்தின் சொத்தாக கருதப்படுகின்றனர். எனினும் இலங்கைகயின் தற்போதைய நெருக்கடியின் விளைவாக எமது பிள்ளைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் வளர்கின்றனர்.  

எனக்கு இன்றைக்கு ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியின் படி, பள்ளிக் குழந்தைகள் உணவிற்குப் பதிலாக வெள்ளிக்கிழமை முதல் ஞாயிறு வரை வெறும் தேநீர்ர் அருந்தி வருவதால், என்னிடம் உதவி வேண்டி உள்ளார் .  

“பசுமைப் பள்ளி - பசுமைபுரட்சி ” திட்டம் உணவை இலவசமாகத் தருவதற்குப் பதிலாக, பள்ளிக் குழந்ததகள் தங்களுக்குத் தேவையான காய்கறிகளை தாங்களே பயிர்ச் செய்வதற்கான பயிற்சியும், அதற்குத் தேவையான உபகரணங்களும் இலவசமாக, ஊட்டச்சத்து குறைவான அரசுப் பள்ளிக்குழந்தைகளுக்குக் கொடுத்தால், அப்பள்ளி முதலில் பசுமைப் பள்ளியாக மாறும்.  

பின்னர் அந்த மழலைகள் மூலம் வீட்டில் உள்ளவர்களும் வீட்டுத்தோட்டத்தின் பயிற்சியை அறிவர்.  

அதன் பின் அந்த வீடு பசுமையாக மாறும் பின்னர் படிப்படியாக அந்தச்சமூகம் பசுமையானதாக பசி, பட்டினி ,பஞ்சம் இன்றி மாறும் என்பதில் ஐயமில்லை”.– SBTCF தலைவி பூங்கோதை சந்திரஹாசன் .

நெடுந்தீவை தேர்ந்தெடுப்பதற்கான காரணம்  

நெடுந்தீவு இலங்கையில் வடக்கு மாகாணப் பகுதியில் ஈழத்தமிழர்வாழும் தீவாகும். அங்கு செல்ல நாளான்றுக்கு இரண்டு முறை மட்டும் படகுப் போக்குவரத்து சேவை உள்ளது. இப்போழுதுள்ள பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக நெடுந்தீவு மக்கள் பல இன்னல்களை அன்றாடம் சந்திக்கின்றனர்.  

நெடுந்தீவு பிரகதசசதப அபிவிருத்தி உத்திகயாகஸ்தர் திரு.தி.வசந்தகுமார் அவர்கள் அங்கு வாழும் தமிழ்க் குழந்தைகளின் உணவு மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடுகளை முறியடிக்க SBTCF நிறுவனத்தின் உதவியை நாடினார்.  

SBTCF சார்பாக ஆண்வறிக்கை தயாரிக்க அங்கு சென்றபொழுது தினமும் எந்த ஒரு காய்கறியும் புரதச்சத்துக்கள் நிறைந்த உணவும் இல்லாமல் வெறும் சோறு உண்ணும் குழந்தைகளை நான் பார்த்தபோது அந்த வேதனையை என்னால் வார்த்தைகளால் கூற இயலாது. நான் புகைப்படம் எடுப்பதைப் பார்த்து குழந்தைகள் தங்களது கண்களைத் துடைத்தக்கொண்டு எனக்குச் சிரித்தப்படி காட்சி கொடுத்ததை பார்த்தபொழுது என்னை அறியாமல் என் கண்கள் குளமாகின.  

இந்த பிரச்சினையைச் சமாளிப்பதற்கு பசுமைப்பள்ளி - பசுமைப்புரட்சி திட்டமே உகந்தது என்று எம் நிறுவனத்த தலைவி செல்வி பூங்கோதை தெரிவித்தார் . ந. அனுஜன் SBTCF தலைமை நிர்வாக அதிகாரி.  

பசியால் வாடும் ஈழத்தமிழ்க் குழந்தைகளுக்கு உதவவேண்டிய போது பூங்கோதை அவர்களுக்கு முதலில் நினைவிற்கு தோன்றியது சமூக அக்கறை கொண்ட பிரபலமாக ஊட்டச்த்து நிபுணரான தன் பள்ளித்தோழி திவ்யா சத்யராஜ் அவர்கள் ஆவார்.   

 நெடுந்தீவில் வாழும் ஈழத்தமிழ்க் குழந்தைகளில் ஊட்டச்சத்தை மேம்படுத்த பசுமைப்பள்ளி பசுமைப்புரட்சி திட்டத்தை பற்றி பூங்கோதை அவர்கள் சொன்னபோது என் சேமிப்பிலிருந்து ஒரு தொகையை காசோலையாக எனது தந்தை சத்யராஜ் அவர்கள் பிறந்தநாள் அன்று இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்காகக் கொடுத்தேன். உணவும் ஊட்டசத்தும் வசதியானவர்களுக்கு மட்டும்தான் என்பது நியாயம் கிடையாது. நெடுந்தீவில் வாழும் என் தமிழ்ப்பிள்ளைகளின் உடலினை உறுதிசெய்ய அறிவை விரவாக்க அவர்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு தேவை. பூங்கோதை அவர்கள் பசுமைப்பள்ளி பசுமைப் புரட்சி ஒரு அற்புதமான திட்டம். புரட்சித்தமிழன் சத்யராஜ் அவர்களின் மகளாகவும் ஒரு தமிழ் மகளாகவும் என் ஈழத்தமிழர்களின் நலன்காக்க உழைப்பேன். திவ்யா சத்யராஜ் , ஊட்டசத்து நிபுணர் மகிழ்மதி இயக்கத்தின் நிறுவனர்.  

இதன் விளைவாக SBTCF தலைவி பூங்கோதை சந்திரஹாசனும் ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜூம் கைகோர்த்து பசுமைப்பள்ளி பசுமைப்புரட்சி திட்டத்தை கடந்த வருடம் அக்டோபர் 25 திகதி நெடுந்தீவில் உள்ள குழந்மை இயேசு பாலர் பள்ளியில் மாதிரி செய்ற்திட்டமாக வெற்றிகரமாகத் தொடங்கினர்.

திட்டத்தின் செயற்பாட்டிற்கான அணுகுமுறை

பாலர் பள்ளியில் பயிலும் குழந்தைகளின் தாய்மார்களுக்கு விவசாயப்பயிற்சி அளிக்கப்பட்டு வேளாண் துறைத் திணைக்கள விவசாயப் போதானாசிரியரின் அனைத்து உபகரணங்களும் தலைவி பூங்கோதை மற்றும் இதர குழுவால் இவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.  

பாலர்பள்ளிச் சமையலறைப் பொருத்தமான சமையலறையாகப் புணரமைப்பு செய்யப்பட்டது. சமையறைக்கு தேவையான அனைத்து உபகரணங்கும் கொடுக்கப்பட்டன.  

பயனாளியின் கருத்து 

என் குழந்தைகள் மிகவும் ஆர்வத்துடன் இந்த தோட்டப்பயிர்ச செய்கையில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கென சில செடிகளைத் தேர்ந்தெடுத்து மிக அன்புடன் அவற்றைப் பாரமரிக்கின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு இயற்கையின் மீது அன்பும் மதிப்பும் அதிகரிக்கின்றது என நான் நம்புகின்றேன். திருமதி டிலானி டொனேஷ்.  

நான் 15 வருடங்களாக இந்தியாவில் புதுக்கோட்மை மாவட்டத்தில் தோப்புக்கொல்லை முகாமில் அகதியாக இருந்துள்னேன். நான் 2003 ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பினேன். நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக நெடுந்தீவைச் சேர்ந்த பெரும்பாலான குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருமானம் மிகவும் குறைந்து சிறுவர்களின் போஷாக்கை நிலைப்படுத்த முடியவில்லை. SBTCF இன் திட்டம் மிகப்பயனுள்ளதாகவும் குழந்தைகளின் உணவு போஷாக்கு பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வாகவும் அமையும் நம்புகின்றேன். ஜெனட் ஜான்சன் நெடுந்தீவில் பொது சுகாதாரப் பரிசோதகர்.  

இத்திட்டத்தின் மூலம் பள்ளியில் குழந்தைகள் உண்ணும் உணவில் அதிக் காய்கறிகளைச் சேர்த்து கொள்ள வழிவகுக்கிறது. இவை அனைத்தும் இயற்கை முறையில் விளைந்தது சிறப்பம்சமாகும். நெடுந்தீவு உத்தியோகஸ்தர் திரு.தி வசந்தகுமார.    

அக்டோபர் மாதம் ஆரம்பித்த இத்திட்டத்தின் பலனாக இப்போது விதைகள் செடிகளாக வளர்நது அச்செடிகள் மூலம் கிடைக்கும். காய்கறிகளற் மற்றும் பழங்களை பயன்படுத்தி எம் பள்ளிக்குழந்தைகளின் தாய்மார்கள் தயாரிக்கும் போசாக்கான மதிய உணவை குழந்தைகள் மகிழ்ச்சியோடு உண்ணுகின்றனர். தலைமை ஆசிரியர் குழந்தை யோசு பாலர் பள்ளி.  

“ அழுத குழந்தைகளின் முகத்தில் இன்றைய மகழ்ச்சி நிலையைப் பார்க்க மனதிற்கு இதமாக இருக்கிறது. ந. அனுஜன் SBTCF தலைமை நிர்வாக அதிகாரி.   

முடிவுரை 

இந்த மாதிரி செயற்திட்டத்தின் தொடர் நடவடிக்கையாக நெடுந்தீவில் மேலும் இரண்டு பாலர் பள்ளிகளிலும் மற்றும் மூன்று அரசு பள்ளிலும் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

இது எங்கள் முயற்சியின் ஆரம்பமே நம் தமிழக அரசும் அரசியல் பிரமுகர்களும் அரசியல் ஆர்வலர்களும் திரை துறையினர்கயும் உலகெங்கும் வாழும் இந்தியர்களும் ஈழத்தமிழ்களும் அனைத்து பிரபலங்களும்.  

ஈழத்தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒவ்வொரு போராளியும் எங்களுடன் கைகோர்த்து ஈழத்தமிழ்க் குழந்தைகளின் உணவுப் பற்றாக்குறையைப் போக்க மேன்மேலும் புரட்சியை பள்ளிகளில் தொடர எங்களின் அடுத்த முயற்சியை விரைவில் அறிவிப்போம்.   

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், கொழும்பு 6

27 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

South Harrow, United Kingdom, Woodstock, United Kingdom

29 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
கண்ணீர் அஞ்சலி

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உயரப்புலம், மாங்குளம், தோணிக்கல்

08 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US