என் அன்பு தம்பி விவேக்! எப்படி சொல்றது தெரியல... கலங்கியபடி பேசிய நடிகர் சத்யராஜ் வீடியோ
நடிகர் விவேக் மறைவுக்கு சத்யராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நகைச்சுவை நடிகர் விவேக்கின் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அவரின் மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சத்யராஜ் வெளியிட்ட வீடியோவில், வணக்கம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த என் அன்பு தம்பி... எப்படி சொல்லுறது? அவர் மறைவுக்கு என்ற வார்த்தையை பயன்படுத்துவது மனதுக்கு கஷ்டமாக உள்ளது.
அவர் நம்மளோடு இல்லாமல் போனதற்கு ஆழ்ந்த வருத்தங்கள். வார்த்தைகளால் அவர் குடும்பத்துக்கோ, கோடிக்கணக்கான ரசிகர்களுக்கோ,எனக்கோ ஆறுதல் சொல்வது என்பது முடியாத காரியம்.
தம்பி உன்னை இழந்து வாடும் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன், என்ன பேசுவதே என்றே தெரியவில்லை என கலங்கியுள்ளார்.
Actor Sathyaraj sir's
— RIAZ K AHMED (@RIAZtheboss) April 17, 2021
Condolence message for chinna kalaivanar demise #RIPVivekSir #ripvivek #RIP ,,??? pic.twitter.com/gRSgTizuai