பிரபல திரைப்பட நடிகர் செந்திலுக்கு கொரோனா உறுதி! உடல் நிலை குறித்து அவர் வெளியிட்ட வீடியோ
பிரபல திரைப்பட நடிகரான செந்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தன்னுடைய உடல்நிலை குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸால் தமிழ் திரைப்பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல திரைப்பட நடிகரான செந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்தி வெளியானது.
இந்நிலையில் தன்னுடைய உடல்நிலை குறித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனக்கு கொரோனா வந்தது உண்மை தான். யாரும் பயப்பட வேண்டாம்.
நான் நன்றாக உள்ளேன். கொரோனா வந்தால் யாரும் பயப்படத் தேவையில்லை. பரிசோதனை செய்துகொண்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். மருத்துவர்கள் சொன்ன மருந்து மாத்திரைகளைச் சாப்பிடுங்கள். தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தான் எனக்குப் பெரிய அளவு பாதிப்பு இல்லை.
அதேபோல நீங்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். உடலுக்கு மிகவும் நல்லது. எனக்கு அடுத்த பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதியானால் வீட்டில் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் எனச் சொல்லியிருக்கிறார்கள். பயப்படத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.