டாஸ்மாக் திறப்புக்கு எதிராக கொந்தளித்த நடிகர் செந்தில்? உண்மை என்ன?
இந்தியாவின் தமிழ்நாட்டில் கொரோனா பரவலால் போடப்பட்ட ஊரடங்கு, சில தளர்வுகளுடன் வரும் ஜூன் 21ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நடிகர் செந்தில் ட்விட்டரில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்… “மக்களின் வாழ்க்கையைவிட டாஸ்மாக் முக்கியமா? தயவுசெய்து டாஸ்மாக்கை மூடிவிட்டு மக்களின் உயிரைக் காப்பாற்ற மு.க. ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறோம். நன்றி! #CloseTasmac” என பதிவிட்டுள்ளார்.
தற்போது இவர் , நான் அவ்வாறு பதிவிடவில்லை, தனது பெயரில் போலி டுவிட்டர் கணக்கு தொடங்கியுள்ளதாக புகார் அளித்துள்ளார்.
“சாதாரன கணக்கே எனக்கு தெரியாது, சமூக வலைதளத்தில் கணக்கு எப்படி இருக்கும், டாஸ்மாக் குறித்து வெளியிட்ட இந்த பதிவு உண்மை இல்லை” என தெரிவித்துள்ளார்.