பாலியல் ஆசைகளை தூண்டும் படங்களை என் கணவர் எடுத்தார்! நடிகை ஷில்பா ஷெட்டி பொலிசில் வாக்குமூலம்
பிரபல திரைப்பட நடிகையான ஷில்பா ஷெட்டில் தன்னுடைய கணவர் பாலியல் ஆசைகளை தூண்டும் படங்களையே எடுத்தார் என்று பொலிஸ் விசாரணையில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ்குந்த்ரா ஆபாசபடங்கள் தயாரித்து வெளியிடுவதாக, கடந்த பிப்ரவரி மாதம் மும்பை குற்றப்பிரிவு பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
ஆனால் போதுமான ஆதாரங்கள் கிடைக்காத காரணத்தினால், பொலிசார் அதற்கான நேரம் கிடைக்கும் வரை காத்திருந்தனர். இந்நிலையில், கடந்த திங்கட் கிழமை ராஜ்குந்த்ராவை பொலிசார் அதிரடியாக கைது செய்தனர்.
இதற்கிடையில், நேற்று ராஜ்குந்த்ராவின் மனைவியான ஷில்பா ஷெட்டியின் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெற்றனர்.
அதில், என்னுடைய கணவர் பாலியல் ஆசையைத் தூண்டும் நோக்கம் கொண்ட பாலியல் படங்களுக்கும், ஆபாச படங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டை விவரித்துள்ளார்.
மேலும் குந்த்ரா ஆபாச படங்கள் தயாரிப்பதில் ஈடுபடவில்லை. அவர் ஒரு அப்பாவி என கூறியுள்ளார்.
இருப்பினும் அவரிடம் இருந்து பல்வேறு தகவல்களை பெற முடியும் என்று, பொலிசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர்.